Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்கள் நிலை குறித்து மத்திய, மாநில அரசுகள் தெளிவான முடிவை அறிவிக்க கோரி பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் இன்று திடீர் உண்னாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2011ம் ஆண்டு இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற எமர்சன், வில்சன், அகஸ்டஸ், லாங்லெட், பிரசாந்த் ஆகிய 5 மீனவர்களை போதை பொருள் வைத்திருந்ததாக சொல்லி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மல்லாகம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் மீதான வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 30ம் திகதி 5 மீனவர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் இந்த தீர்ப்புக்கு எதிராக மீனவ அமைப்புகளு, பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வந்தன.

இதையடுத்து, இந்த வழக்கில் மேல்முறையீட்டு செய்ய மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்தன. இதன்படி கடந்த 3 நாட்களுக்கு முன் தூக்கு தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு செய்யப்பட்டது.

நேற்று, தூக்கு தண்டனையை ரத்து செய்ய இலங்கை அதிபர் முடிவு செய்திருப்பதாக இலங்கை மாகாண அமைச்சர் செந்தில் தொண்டைமான் தெரிவித்திருந்தார். இதை அறிந்த மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  இராமேஸ்வரம் மீனவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்நிலையில், நேற்று வெளியான செய்தி தொடர்பாக இலங்கை அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் மறுப்பு வெளியிட்டிருக்கிறார். இதனால், மீனவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் தண்டனை குறித்து உண்மையான நிலையினை மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்க வலியுறுத்தி மீனவர்களின் குடும்பத்தினர் தங்கச்சிமடத்தில் இன்று திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு தரப்பில் இருந்து முழுமையான, உண்மையான தகவல் வரும்வரை தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடரப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால், மீனவர்கள் மத்தியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

0 Responses to இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் திடீர் உண்ணாவிரதம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com