வடக்கு- கிழக்கில் போர் முடிவுற்ற போதிலும் மக்களின் வாழ்வில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
வடக்கு- கிழக்கில் போரின் பின் வீதிகளும், கட்டடங்களும் உருவாகியிருக்கின்றன. ஆனால், 80 வீதமான மக்கள் இப்போதும் கடனாளிகளாகவே இருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே சுனில் ஹந்துன்நெத்தி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கையில் உள்ள முற்போக்குவாதிகளிடம் ஒன்றை மட்டுமே மக்கள் விடுதலை முன்னணி கேட்கிறது. சுதந்திரமான நாடு ஒன்றை உருவாக்க இன, மத, சாதி பேதமில்லாமல் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கு- கிழக்கில் போரின் பின்னரும் மக்களின் வாழ்வில் மாற்றமில்லை: சுனில் ஹந்துன்நெத்தி