தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சமீபத்தில் காங்கிரஸ் தலைமை இ.வி.எஸ்.இளங்கோவனை தலைவராக நியமித்தது. தலைவராக இருந்த ஞானதேசிகன் தலைமைப் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் காங்கிரசில் இருந்த ஜிகே.வாசன் காங்கிரசிலிருந்து விலகி தனிக்கட்சித் தொடங்கப் போவதவாக அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து ஜிகே.வாசனை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக்கியது. இருப்பினும் ஞானதேசிகன் உள்ளிட்ட பல தமிழக காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்தவர்கள் ஜிகே.வாசனுடன் இணைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் நிலைக் குறித்து விவாதிக்க, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்து இளங்கோவன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர். சோனியாகாந்தி இன்று அல்லது நாளை இவர்களை சந்தித்து, காங்கிரஸ் நிலை மற்றும் கட்சியை தமிழகத்தில் வலுப்படுத்துவதுக் குறித்து சோனியா இவர்களுடன் ஆலோசிப்பார் என்று தெரிய வருகிறது.

0 Responses to தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு சோனியாகாந்தி அவசர அழைப்பு!