Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொது எதிரணியில் இணைந்துள்ள கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு விகாரமகாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கில் கைச்சாத்திடப்படவுள்ளது.

எதிரணிக் கட்சிகளை ஒருங்கிணைத்த சோபித தேரர், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, ஜனநாயகக் கட்சித் தலைவர் சரத் பொன்சேகா, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், சிவில் அமைப்புக்களின் தலைவர்களும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளனர்.

இதனிடையே, இந்த நிகழ்வை நடத்த விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்ற வந்ததாகவும், ஆனாலும், தற்போது விகாரமகாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கில் இந்நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் நோக்கில் நடைபெறும் எதிரணியின் இந்த நிகழ்வை தடுத்திட பல்வேறு சக்திகள் இடையூறு செய்து வருகின்றன. இந்த இடையூறுகள் எங்களை நிறுத்திவிட முடியாது என்பதுடன் அவசியமானால் நடு வீதியில் அமர்ந்தும் இந்நிகழ்வை நடத்திட, பொது எதிரணி தயாராக இருக்கின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to எதிரணிக் கட்சிகளிடையே வரும் திங்கட்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com