ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை தமக்கு இல்லை. ஆனாலும், தமிழ் மக்கள் அரசாங்கத்துக்கு வாக்களிப்பார்கள் என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தேவையில்லை. அவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபடும் எண்ணமும் அரசாங்கத்துக்கு இல்லை. ஏனெனில், எம்முடைய பிரதிநிதிகள் தமிழ் மக்களிடையேயும் இருக்கின்றார்கள். அவர்களின் ஆதரவே போதும், தமிழ் மக்கள் எமக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to த.தே.கூ.வின் ஆதரவு எமக்கு அவசியமில்லை; அவர்களுடன் பேச்சுமில்லை: அரசாங்கம்