ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று புதன்கிழமை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அந்த அறிவிப்பு இன்று வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலத்தின் 4வது ஆண்டு நிறைவு நேற்றாகும். இந்த நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவித்தலை தேர்தல்கள் திணைக்களத்துக்கு உத்தியோகபூர்வமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், நேற்று நள்ளிரவு வரையில் அவ்வாறான அறிவித்தல்கள் ஏதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. அதுபோல, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையிலான சந்திப்பும் ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் வேட்பாளராக அறிவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும், முக்கிய அமைச்சருமான மைத்திரிபால சிறீசேன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும், மைத்திரிபால சிறீசேன அரசாங்கத்திலிருந்து வெளியேறப்போவதாக வெளியான செய்திகளை அவர் முற்றாக மறுத்துள்ளார். இதனிடையே, ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவித்தல் ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்படவுள்ளது.

0 Responses to அவசர அமைச்சரவைக் கூட்டம் நேற்று; ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று!