மகிந்தராஜபக்ஷவுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக தமிழ் மக்களை பழிவாங்க வேண்டாம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றத்தில் வைத்து இந்த கோரக்கையை முன்வைத்தார்.
சிறிலங்காவின் அரசாங்கத்தினால் சிங்கள மக்களுக்கு வடமாகாணத்தில் பல வீடுகளும், காணிகளும் வழங்கப்படுகின்றன.
இதனை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை.
ஆனால் அதற்காக தமிழ் மக்களின் காணிகளை பலவந்தமாக பறிக்க வேண்டாம் என்றே கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.
வடமாகாணத்தில் சொந்த காணிகளை உடைய மக்கள் குடியேற்றப்படாமல், மழையிலும், வெயிலிலும் வாடுவதை கொஞ்சம் நினைத்துப் பார்த்து செயற்படுங்கள் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் வன்னி மாவட்டத்தில் சிறிலங்காவின் வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீடுகள் மிகவும் மோசமான தரத்தை கொண்டிருப்பதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

0 Responses to ராஜபக்சவுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக தமிழ் மக்களைத் பழிவாங்க வேண்டாம்