முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடை கொழும்பு உயர்நீதிமன்றத்தினால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருந்த சரத் பொன்சேகாவின் கடவுச்சீட்டை 100,000 ரூபாய் பிணை முறியின் அடிப்படையில் அவரிடம் ஒப்படைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா சிங்கப்பூர் செல்ல வேண்டியுள்ளதாகவும், அதற்கு நீதிமன்ற அனுமதி வேண்டுமென்றும் அவரது சட்டத்தரணியினால் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், சரத் பொன்சேகா வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வழங்கியதோடு அவரது கடவுச்சீட்டை ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. இதற்கமைய, வரும் 20ஆம் திகதி வரை, சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதற்கு பொன்சேகாவுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
0 Responses to பொன்சேகா வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்!