Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இனிமேலும் பதவிகள் மீதான எதிர்பார்ப்பைக் கொண்டிருக்காது என்று அந்தக் கட்சியின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களின் வாக்குகள் பெறுமானமுள்ளவையாக கணக்கில் எடுக்கப்படுவதற்கான ஒரு நிலைமையில்லாமல், தேர்தல்களில் யாருக்கு ஆதரவு என்கிற எந்தவொரு நிலைப்பாட்டிற்கும் முஸ்லிம் காங்கிரஸ் வராது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொத்துவில் பசறிச்சேனைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'மக்களின் தேவைகளை நிறைவு செய்ய முடியாத அரசில் தொடர்ந்தும் நீடிக்கக் கூடாது என்ற அங்கலாய்ப்பு எமது ஆதரவாளர்கள் மத்தியில் இருக்கிறது. இன்னும் இரண்டு மாத காலத்துக்குள்; முக்கியமான தேசிய மட்டத் தேர்தல் நடைபெறலாமென்ற என் நிலை உள்ளது.

இந்நிலையில், எமது கட்சியின் தயவை நாடியிருக்கிற எந்த தரப்பாக இருந்தாலும் எமது மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு குறித்த சரியான அறிவித்தலில்லாமல் கட்சியை மீண்டும் ஒரு முறை போடுகாயாகப் பாவிக்கலாம் நினைத்தால் அது நடக்காது என்பதை மிகத் திட்டவட்டமாக கூறி வைக்கின்றேன்” என்றுள்ளார்.

0 Responses to பதவிகள் மீதான எதிர்பார்ப்பை எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கொண்டிராது: ஹக்கீம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com