பதுளை ஹல்துமுல்ல மீரியபெத்த பகுதியில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட மண்சரிவினால் 38 பேர் மாத்திரமே காணாமற்போயுள்ளதாகவும், அவர்களில் 5 பேரின் சடலங்கள் மாத்திரமே இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு, சர்வதேச ஊடகங்கள் இது தொடர்பில் முரண்பாடான தகவல்களை வெளிப்படுத்தி வருகின்றன. குறிப்பாக ஒரு சில ஊடகங்களில் காணாமற்போனோர் எண்ணிக்கை 300 என்றும், சில ஊடகங்களில் 150 என்றும் தகவல் வெளியிட்டுள்ளன. அத்துடன், மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 14 என்றும், 19 என்றும் முரண்பாடான தகவல்களை சில ஊடகங்கள் தெரிவித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மக்களுக்கு சரியான தகவல்களை வழங்க வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. இது தொடர்பாக நாம் உண்மையான தகவல்களை வழங்க வேண்டியுள்ளது. குறிப்பாக கொஸ்லந்த- மீரியபெத்த பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தினால் பலர் காணாமற்போயுள்ளனர்.
இது தொடர்பாக நாம் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த உறவினர்களுடனும், கிராம சேவகர் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினோம். அவர்கள் தெரிவித்த தகவலின் படி மொத்தமாக 38 பேர் மாத்திரமே காணாமற்போயுள்ளனர். அத்துடன் இதுவரை மீட்கப்பட்ட சடலங்களில் 3 பெண்களும் 6 வயது சிறுவனும் மேலும் ஒரு சடலமும் மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் நால்வரின் சடலம் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஒருவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
எனவே, பொறுப்பு வாய்ந்த ஊடகங்கள் பொலிஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சரியான தகவல்களை வெளியிடுமாறும் மக்களிடையே வீணான சந்தேகங்களை ஏற்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம். இதேவேளை, கொஸ்லந்த- மீரியபெத்த மண்சரிவில் காணாமற்போனோர் தொடர்பாக தொடர்ந்து மீட்புப் பணியில் பொலிஸாரும், இராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர்” என்றுள்ளார்.

0 Responses to மீரியபெத்த மண்சரிவில் 38 பேரே காணாமற்போயுள்ளனர்: அஜித் ரோஹன