எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக நம்பப்படும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து பொது எதிரணியின் வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடும் சாத்தியங்களே அதிகமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே போட்டியிடவுள்ளார். அவர் போட்டியிடுவதில் சட்ட சிக்கல்கள் ஏதுவும் இல்லை என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து பொது எதிரணியின் சார்பில் யாரை பொது வேட்பாளராக முன்னிறுத்துவது என்பது தொடர்பில் தொடர்ந்தும் குழப்பங்கள் நீடித்து வருகின்றன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, கரு ஜயசூரிய, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டவர்களின் பெயர்கள் தொடர்ந்தும் முன்மொழியப்பட்டு வரும் நிலையில், சந்திரிக்கா குமாரதுங்க தான் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூரியவை பொது வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தவிர்ந்த பொது எதிரணியின் கட்சிகள் சில ஆதரவு தெரிவித்திருந்தன.
ஆனாலும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையே ஏற்கனவே முன்மொழிந்திருந்தது. இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்காவை பொது வேட்பாளராக எதிரணிக் கட்சிகளை ஏற்க வைக்கும் முயற்சிகள் தொடர்வதாக முக்கியஸ்தர்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதனிடையே, எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் தயாராக இருப்பதாக இலங்கைக் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும், எதிரணி பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜூண ரணதுங்க அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மீண்டும் மஹிந்த- ரணில் போட்டி?