இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீள அழைப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் இந்திய அகதி முகாம்களில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை மீளவும் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் விரைவில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக வடமாகாணசபை தெரிவித்துள்ளது.
இதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், இந்தியாவில் தங்கியுள்ள அகதிகளை நாடு திரும்புமாறு கட்டாயப்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அகதிகள் நாடு திரும்ப விரும்பினால் அவர்களுக்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கை அகதிகளை மீள அழைப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை