Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எகிப்தில் சுமார் 29 வருடங்களாகப் பதவி வகித்த 86 வயதுடைய முன்னால் அதிபர் ஹோஸ்னி முபாரக் இற்கு எதிராக 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் அங்கு வெடித்த புரட்சி இராணுவத்தால் இரும்புக் கரம் கொண்டு அடக்கப் பட்டது.

இதில் பல நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப் பட்டிருந்தனர். இதற்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தார் மற்றும் ஊழல் மோசடி போன்ற குற்றங்களால் இவர் பதவி இறக்கப் பட்டு 3 வருடங்கள் சிறையில் கழித்திருந்தார்.

இந்நிலையில் முபாரக் நிரபராதி என எகிப்தின் மேல் முறையீட்டு நீதிமன்றம் நேற்று சனிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவர் விரைவில் விடுவிக்கப் படுவார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. எகிப்தின் மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எகிப்தில் முபாரக் இன் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் என இரு தரப்பினருக்கும் வெவ்வேறுபட்ட உணர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் இத் தீர்ப்பை எதிர்த்து டாஹிர் சுதந்திர தின சதுக்கத்தில் சுமார் 3000 பேர் போராட்டத்தில் குதித்தனர். இதனை போலிசார் அடக்க முயன்ற போது ஒருவர் பலியானதுடன் 9 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் எகிப்தின் தொலைக்காட்சிச் சேவை நிலையம் ஒன்றிட்கு முபாரக் அளித்த பேட்டியில் தான் எந்த குற்றச்செயலிலும் சம்பந்தப் படவில்லை என்று கூறியுள்ளார்.

ஜனவரி 2011 இல் முபாரக் அதிபராகப் பதவி வகித்த போது நாட்டில் அதிகபட்ச வறுமை, வேலையில்லாப் பிரச்சினை மற்றும் அடக்குமுறை என்பவற்றுக் எதிராக இவர் பதவி விலக வேண்டும் எனக் கோரி கெய்ரோ நகரில் பல ஆயிரக் கணக்கான மக்கள் இணைந்து மிகப் பெரிய ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை இராணுவமும் போலிசும் அடக்க முயன்ற போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் சிக்கி 800 இற்கும் அதிகமானவர்கள் பலியானதாகக் கணிக்கப் பட்டது. இதனை அடுத்து பதவி இறக்கப் பட்ட முபாரக்கிற்கு 2012 ஆம் ஆண்டு வழக்கின் போது குற்றவாளி எனத் தீர்ப்பு விதிக்கப் பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2013 ஏப்ரலில் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேன் முறையீட்டு நீதிமன்றம் முன்னைய தீர்ப்பை இல்லாமல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதைவிட முபாரக்குடன் சேர்த்து ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருந்த முன்னால் உட்துறை அமைச்சர் மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகள் உட்பட 7 பேரையும் நிரபராதிகள் என இந்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தற்போது எகிப்தில் இராணுவ ஆட்சி நடைபெறுவதுடன் அதன் அதிபராக ஜெனரல் அப்டெல் ஃபட்டாஹ் எல் சிசி பதவி வகித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to எகிப்து முன்னால் அதிபர் ஹோஸ்னி முபாரக் கொலைக் குற்றத்தில் இருந்து விடுவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com