ஆகஸ்ட்டில் அமெரிக்காவின் மிசோரி மாகாணத்திலுள்ள பெர்குசன் நகரில் கையில் ஆயுதம் ஏந்தியிராத அப்பாவி கருப்பின வாலிபர் ஒருவரை வெள்ளையின போலிஸ்காரர் ஒருவர் உரிய காரணம் ஏதுமின்றி சுட்டுக் கொன்ற சம்பவத்தில் குறித்த போலிஸ்காரர் மீது நீதிமன்றத்தில் குற்ற விசாரணை தேவையில்லை எனக் கடந்த 24 ஆம் திகதி ஜூரிகள் குழு அறிவித்திருந்தது.
இத்தீர்ப்பால் கொதிப்படைந்த கருப்பின மக்கள் பெர்குசன் நகர் உட்பட அமெரிக்காவின் பல மாநிலங்களில் பாரியளவு தொடர் ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் அமெரிக்க மக்களின் இயல்பு வாழ்க்கை சற்றுப் பாதிப்பு அடைந்தது. மேலும் பெர்குசனில் ஆர்ப்பாட்டம் கலவரமானது. ஒரு காரும் 12 வணிக நிறுவனங்களும் தீயிடப் பட்டதுடன் சில வணிக இடங்கள் கொள்ளையடிக்கப் பட்டன. தொடர் பதற்றம் காரணமாக 2200 இராணுவத்தினர் குவிக்கப் பட்டனர். ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகள் பிரயோகிக்கப் பட்டன. எதிர்ப்பு அலைகள் வீரியம் அடைந்ததை அடுத்து கருப்பின வாலிபரான மைக்கல் பிரவுனை சுட்டுக் கொன்ற காவல் துறை அதிகாரியான 28 வயதாகும் டேரன் வில்சன் தானாகவே முன் வந்து தனது ராஜினாமாக் கடிதத்தை சனிக்கிழமை சமர்ப்பித்துள்ளதாக அவரின் சட்டத்தரணி உறுதிப் படுத்தியுள்ளார்.
6 வருடங்கள் கடமையில் இருந்த டேரன் வில்சன் தனது ராஜினாமாக் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், 'பெர்குசன் நகர மக்கள் ஆறுதல் அடைவதற்கும் எனது சக போலிஸ் நண்பர்கள் பாதுகாப்பாக தமது கடமைகளை செய்ய மக்கள் அனுமதிக்க வேண்டும் என்பதற்காகவுமே தான் இம்முடிவை எடுத்துள்ளேன்!' குறித்த சம்பவம் நடந்த ஆகஸ்ட் முதற்கொண்டு தற்காப்புக்காக டேரன் வில்சன் மறைந்திருந்தார் என்பதுடன் சம்பவம் நடந்து 112 நாட்கள் கழித்தே தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்காவில் கருப்பின இளைஞரை சுட்டுக் கொன்ற போலிஸ்காரர் ராஜினாமா