கடலூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை ஜிகே.வாசன் ஆதரவாளர்கள் கைப்பற்ற முயற்சி செய்ததில் கடலூர் காங்கிரஸ் அலுவலகம் முன் பதற்றம் நிலவுகிறது.
காங்கிரசில் இருந்து ஜிகே.வாசன் பிரிந்து தனிக்கட்சித் தொடங்க உள்ள நிலையில், கடலூரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஜிகே.வாசன் ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சர் உட்பட சுமார் 200 பேர் திரண்டு, கட்சி அலுவலகத்தில் இருந்த போர்ட் மற்றும் பொருட்களை அகற்றி, அலுவலகத்தைக் கைப்பற்ற முயற்சித்துள்ளனர்.
இதையடுத்து, அங்கு போலீசார் விரைந்து வந்து, ஜிகே.வாசன் ஆதரவாளர்களை அகற்றி உள்ளனர். மேலும், பதிலுக்கு காங்கிரசார் கூடக்கூடும் என்பதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு அலுவலகத்தில் நுழைய 145 தடையுத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் தெரிய வருகிறது. இதற்கிடையில் ஜிகே.வாசன், தமது கட்சிக்கு முன்பு போலவே தமிழ் மாநில காங்கிரஸ் என்று பெயர் சூட்டவே முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு உடனடியாக தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் இந்த முடிவு சென்றும் தெரிய வருகிறது.
மேலும், புதுவையில் ஒருவர் தமிழ்மாநில காங்கிரஸ் என்று கட்சித் தொடங்கி இருப்பதாகவும், அவரை சமாதனப்படுத்தி விரைவில் திருச்சி அல்லது சென்னையில் மாநாடு நடத்தி கட்சியின் பெயர் மற்றும் கட்சியின் கொடி இவற்றை அறிவிக்க ஏற்பாடுகள் மிக விரைவில் நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிய வருகிறது.

0 Responses to கடலூர் காங்கிரஸ் அலுவலகத்தை ஜிகே.வாசன் ஆதரவாளர்கள் கைப்பற்ற முயற்சி