காங்கிரஸ் தமிழ் ஈழ மக்களை எதிர்க்கவில்லை. விடுதலைப் புலிகளைத் தான் எதிர்க்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே. காங்கிரஸ் எப்போதும் அனைத்து தீவிரவாத இயக்கங்களையும் எதிர்க்கும் என்று காங்கிரஸில் இணைந்துகொண்ட நடிகை குஷ்பூ கூறியுள்ளார்.
நடிகை குஷ்பூ காங்கிரஸில் இணைந்தவுடன் இன்று முதன் முதலாக சென்னை சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எந்தப் பதவியையும் எதிர்ப்பார்த்து தாம் காங்கிரசில் இணையவில்லை என்றும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தமக்கு என்ன பதவி அளிப்பது என்று தெரியும் என்றும் கூறினார்.
மேலும், ஜாதி மத பேதமின்றி காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும் என்றும், இதை ஒரு நடிகையாக இல்லாமல் காங்கிரஸ் தொண்டராக கிராமங்கள் மற்றும் நகரம் தோறும் அவர்கள் மட்டத்துக்கு சென்று இதை எடுத்துச் சொல்ல இருப்பதாகவும், ஜாதி மத பேதங்களின்றி காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் தான் ஏன் திமுகவிலிருந்து விலகினேன் என்பதனை அன்றும் சொன்னதில்லை. இன்றும் சொல்ல மாட்டேன். இனியும் சொல்லமாட்டேன் எனக் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில் கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் எழுச்சி பெற்று வருகிறது என்றும், குஷ்பூ காங்கிரசில் இணைந்தவுடன் அது மேலும் அதிகமாகி உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், தமிழகத்துக்கு 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது என்றும், இதில் 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழகத்தில் உற்பத்தியாகிறது என்றும் கூறியுள்ளார். பற்றாக்குறையாக இருக்கும் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசு வெளிமாநிலத்திலிருந்து வாங்குவதால்தான் 3 ரூபாய் மதிப்புள்ள ஒரு யூனிட் மின்சாரம் கிட்டத்தட்ட 5 ரூபாய்க்கு கிடைக்கிறது என்றும் கூறியுள்ளார்.
கூடங்குளம் போன்ற உள் மாநிலத்தில் வாங்குவதை விடுத்து, தமிழக அரசு எந்த அமைச்சரை திருப்திப்படுத்த வெளி மாநிலங்களில் மின்சாரத்தை வாங்குகிறது. இந்த ஊழலுக்கு காரணமானவர்கள் யார் என்பதை முதல்வர் பன்னீர்செல்வம் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் இ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
அதோடு தமிழக மக்களின் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு ஒதுக்கியிருந்த 34 கோடி ரூபாயை மத்திய அரசு 23 கோடியாகக் குறைத்துள்ளது. இதை மத்திய அரசு மீண்டும் உயர்த்தி அறிவிக்காவிட்டால் கிராமங்களில் இருக்கும் பெண்களைத் திரட்டி, தாலுக்கா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு முன்னர் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

0 Responses to விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்பதால் காங்கிரஸ் எதிர்க்கிறது: காங்கிரஸில் இணைந்த குஷ்பு தெரிவிப்பு