Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு 59 வீதமானோரும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 41 வீதமானோரும் ஆதரவளிக்கவுள்ளதாக தேசிய புலனாய்வுப் பிரிவு மற்றும் இரகசிய பொலிஸார் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனை, கொழும்பிலிருந்து ஞாயிறு தோறும் வெளிவரும் சிங்கள நாளேடான ராவய இந்த வாரத்தின் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளதாக அந்தப் பத்திரிகையின் முக்கியஸ்தர்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, பொது மக்களிடையே தேசிய புலனாய்வுப் பிரிவு மற்றும் இரகசிய பொலிஸார் இணைந்து இரகசியமாக நடத்தியுள்ள இந்த ஆய்வு தகவல் அரச உயர்மட்டத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த ஆய்வுக்கு தலைமை வகித்த அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 Responses to மைத்திரிக்கு 59 வீதமானோரும், மஹிந்தவுக்கு 41 வீதமானோரும் ஆதரவு; ஆய்வில் தகவல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com