Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டின் தேசிய எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்வதற்காகவே எதிரணி விடுத்த வேண்டுகோளை ஏற்று பொது வேட்பாளராக தான் போட்டியிடுவதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தான் தற்போதும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும், பொதுச்செயலாளரும் ஆவேன் என்று குறிப்பிட்ட அவர், தன்னை யாரும் பதவிகளில் இருந்து சட்ட ரீதியாக நீக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹொரகொல்ல - பண்டாரநாயக்க சமாதி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளேன். பண்டாரநாயக்க ஜனன தினமான ஜனவரி 8ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் வெற்றிபெற்று பண்டாரநாயக்க வழியில் செயற்படவுள்ளேன்.

சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் 17 வயது இளைஞனாக வாக்களிக்கும் வயதை அடையாத காலத்திலேயே எனக்கு சிறீலங்கா சுதந்திர கட்சி உறுப்புரிமை கிடைத்தது. கட்சியில் எனக்கு 47 வருடகால அனுபவம் உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் குழுக்கள் விடுத்த அழைப்பின் பேரில் பொது வேட்பாளராக போட்டியிட நான் முன்வந்தமை, நாட்டின் தேசிய எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்யவே ஆகும்.

நான் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது வேறு கட்சியுடன் இணையவில்லை. பொது வேட்பாளராக பொது எதிரணியில் போட்டியிடுகிறேன். கூட்டணி அரசியல் என்பது எனக்குப் புதிதல்ல.

என்னோடு இணைவதாகக் கூறிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கே என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ‘விடியும் போது நல்ல நல்ல விளையாட்டுக்களை காண முடியும்’ என்றே நான் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது. நடக்க வேண்டியவை எல்லாம் சரியான நேரத்தில் நடக்கும்” என்றுள்ளார்.

0 Responses to நாட்டின் தேசிய எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்யவே பொது வேட்பாளரானேன்: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com