தமிழ் மக்கள் உரிமைகளுக்காக, தமிழ்த் தேசிய உணர்வோடு தம்மையே அர்ப்பணித்துப் போராடிக்கொண்டிருக்கும் தமிழக மாணவர்களான தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செம்பியன் மற்றும் மாற்றம் மாணவர் இளையோர் அமைப்பைச் சேர்ந்த பிரதீப் ஆகியோர் மூவரும் இன்று புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ராஜபக்சேவுடன் தொடர்பு வைத்துள்ள லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘கத்தி’ திரைப்படத்திற்கு எதிராக போரட்டங்களை மேற்கொண்ட மாணவர்கள் பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்திருந்தது தமிழகக் காவல்துறை.
பிணைக்காக பாடுபட்ட தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பிற்கும், கூட்டமைப்பில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் வழக்குரைஞர்களுக்கும், உதவிய அனைத்து தோழர்களுக்கும் மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

0 Responses to பொய் வழக்கில் கைதான மாணவர்கள் மூவரும் இன்று விடுவிப்பு!