Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அரசியல் அமைப்பின் 18வது திருத்த சட்டத்திற்கு அமைவாக மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவது தொடர்பில் சட்ட விளக்கத்தினை வழங்குமாறு உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியலமைப்பின் 129(1) பிரிவின் கீழ் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 18வது திருத்த சட்டம் அமலுக்கு வந்த நேரத்தில் தான் இரண்டாவது பதவிக் காலத்தை வகித்துவந்ததால், அத்திருத்தத்திற்கேற்ப மூன்றாவது முறையாக தான் போட்டியிடுவதில் சட்ட ரீதியான சிக்கல் ஏதும் உள்ளதா என்பது பற்றி உயர்நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டுமென ஜனாதிபதி முன்வைத்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஜனாதிபதி பதவியை ஒருவர் இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும் என்றிருந்த நிபந்தனையை 18வது திருத்தச் சட்டம் நீக்கியிருந்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்த மனு சம்பந்தமாக கருத்து தெரிவிக்க விரும்புவோர் வரும் 07ஆம் திகதி பிற்பகல் 03.00 மணிக்குள் அதனை நீதிமன்றத்திடம் எழுத்து மூலமாக சமர்ப்பிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற பதிவாளர் எம்.எம்.ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை திறந்த நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படுமா என்பது பற்றி இப்போதைக்கு உத்தியோகபூர்வமாக தன்னால் பதில் சொல்ல முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது சம்பந்தமாக கருத்து சொல்லக் கேட்டு உயர்சநீதிமன்றத்திடம் இருந்து தனக்கு கடிதம் ஒன்று வந்துள்ளதாக இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் உபுல் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இந்த மனு விசாரிக்கப்படுகின்ற திகதி பற்றி அறிவிக்குமாறு உயர்நீதிமன்றத்தின் பதிவாளரிடம் தான் கேட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடியுமா?; உயர்நீதிமன்றத்திடம் மஹிந்த ராஜபக்ஷ சட்ட விளக்கம் கோரல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com