ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் ஓரிரு நாட்களுக்குள் ஆளுங்கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக பிரதியமைச்சர் ரோஹண திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் சுதந்திரக் கட்சியில் இருந்து யாரும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவும் விடயம் நடக்காது. குறிப்பாக மாத்தளை மாவட்டத்திலிருந்து ஒருவரும் ஆளுங்கட்சியை விட்டு விலக மாட்டார்கள்.
ஆனால் எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் ஓரிரு நாட்களுக்குள் ஆளுங்கட்சியில் இணைந்து கொள்வார்கள். இவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் உள்ளடங்குவர் என்றும் பிரதியமைச்சர் ரோஹண திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஐ.தே.க. முக்கியஸ்தர்கள் ஆளுங்கட்சிக்கு வரவுள்ளனர்! பிரதியமைச்சர் ரோஹண