Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிரணி அதிகாரத்தைக் கைப்பற்றியதும் ராஜபக்ஷக்களின் ஃபைல்கள் வெளியே எடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று செவ்வாய்க்கிழமை ஹொரகொல்ல பகுதியிலுள்ள பண்டாரநாயக்கவின் சமாதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டபின் மக்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை விட்டுச் செல்லும் நபர்களின் ஃபைல்கள் தன்னிடம் இருப்பதாகவும், ஆனால், அதனைக் கொண்டு பழிவாங்கும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

குறித்த விடயம் பற்றி கருத்து வெளியிட்ட சந்திரிக்கா குமாரதுங்க, “எங்களது ஆட்கள் அதிகாரத்துக்கு வந்ததும், ராஜபக்ஷக்களின் ஃபைல்களை இழுப்போம். இப்போதைக்கு அது போதும். இது குறித்து இனி கேள்வி கேட்க வேண்டாம்” என்றுள்ளார்.

0 Responses to அதிகாரத்தைக் கைப்பற்றியதும் ராஜபக்ஷக்களின் ஃபைல்கள் வெளியே எடுக்கப்படும்: சந்திரிக்கா குமாரதுங்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com