இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நோர்வேயின் முன்னைய அரசாங்கம் குறித்தும், தன்னைக் குறித்து பொய்யுரைக்கிறார் என்று இலங்கை அரசாங்கத்துக்கும்- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதான ஏற்பாட்டாளராக செயற்பட்டவரும், நோர்வேயின் முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை நாளை திங்கட்கிழமை வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோர்வேயின் முன்னாள் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியமை குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சனிக்கிழமை குருநாகலில் இடம்பெற்ற கூட்டமொன்றில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அதாவது, “நோர்வேயின் முன்னைய அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதை உறுதிசெய்யக்கூடிய ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. எனவே இதுகுறித்து நோர்வேயின் தற்போதைய அரசாங்கம் விசாரணை செய்யவேண்டும்.
விடுதலைப்புலிகளை தோற்கடிக்க முடியாது என எரிக் சொல்ஹெய்ம் எம்மிடம் தெரிவித்திருந்தார். அவரது கருத்து பிழையானது என்பதை அரசாங்கத்தால் நிரூபிக்க முடிந்தது.
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு முன்னிலையில் தான் சாட்சியமளிக்க தயார் என சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்தும் நாம் எந்த ஆட்சேபனையும் தெரவிக்கவில்லை” என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷ பொய்யுரைக்கிறார்: எரிக் சொல்ஹெய்ம்