Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.

அத்தோடு, அரசாங்கத்தோடு இடம்பெற்றுவந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இனி அவ்வாறான பேச்சுவார்த்தைகள் இடம்பெறாது என்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்ளில் நாட்டின் நல்லாட்சிக்காக தாங்கள் முன்வைத்துள்ள கொள்கைகள் தொடர்பில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், அதனூடாக சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாகவும் ஜாதிக ஹெல உறுமய குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய அண்மையில் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியிருந்தது. அத்தோடு, அரசாங்கத்துடனான அனைத்து தொடர்புகளிலிருந்து நேற்று வியாழக்கிழமை முதல் விலகுவதாகவும் அறிவித்துள்ளது.

நாட்டை நல்வழிப்படுத்துவதற்கான தமது யோசனைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நிராகரித்துவிட்டதாகவும், எனவே அரசாங்கத்துடன் பேசுவதற்காக திறந்து வைக்கப்பட்டிருந்த கதவுகளை தற்போது மூடிவிட்டதாகவும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவர் அத்துரலியே ரத்ன தேரர், பொதுச்செயலாளர் பட்டாலி சம்பிக்க ரணவக்க மற்றும் முன்னாள் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில, மேல் மாகாண சபை உறுப்பினர் நிசாந்த சிறி வர்ணசிங்க ஆகியோர் கலந்துகொண்டு இந்த அறிவிப்புக்களை வெளியிட்டனர்.

0 Responses to மஹிந்தவுக்கு ஆதரவில்லை; அரசுடனான பேச்சுக்களும் முடிந்துவிட்டன: ஜாதிக ஹெல உறுமய

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com