மீனவர்களை மீட்டுக்கொடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு நன்றிக்கடன் பட்டுள்ளது என்று, பாஜக மூத்தத் தலைவர்களுள் சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்.
இலங்கை கொழும்பு நீதிமன்றம் தமிழகம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து கடந்தமாதம் 30ம் திகதி தீர்ப்பளித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பிய நேரத்தில் மீனவர்களை மத்திய அரசு மீட்டுத் தர வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்தது.இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் மீனவர்கள் விடுதலைக் குறித்து பேசியதாக, முதன் முதலில் சுப்ரமணிய சாமி தகவல் வெளியிட்டார். இதையடுத்து இலங்கை அமைச்சர் ஒருவரும் மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க ராஜபக்ஷே சம்மதம் தெரிவித்துள்ளதகத் தகவல் வெளியிட்டார்.
இதற்கிடையில் மீனவர்கள் சார்பில் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் சிக்கல் ஏற்படும் என்றும், இதைத் திரும்பப் பெற்றால் மட்டுமே மீனவர்களுக்கு பொது மன்னிப்பு என்பதும், விடுதலை என்பதும் சாத்தியம் என்கிற நிலையில், மத்திய வெளியுறவுத் துறை வெகு சாமர்த்தியமாக செயல்பட்டது என்றும், இலங்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த மனு திரும்பப் பெறப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் இதுக்குறித்து இப்போது தகவல் வெளியிட்டுள்ள சுப்ரமணிய சாமி, இந்தியாவுடனான நல்லுறவைப் பேணவே ராஜபக்ஷே, தமிழக மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய உத்தரவுப் பிறப்பித்துள்ளார் என்றும், இதற்குக் காரணம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்பதால், அவருக்கு நாடு கடமைப்பட்டுள்ளது என்றும் சுப்ரமணிய சாமி கூறியுள்ளார். அதோடு இரு நாட்டு அரசுகளை ஒருங்கிணைக்க தாம் பாலமாக இருந்ததில் தமக்கு மகிழ்ச்சி என்றும் கூறியுள்ள சுப்ரமணிய சாமி, ராஜபக்ஷேவுக்கும் நாடு நன்றிக் கடன் பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

0 Responses to நரேந்திர மோடிக்கு நாடு நன்றிக்கடன் பட்டுள்ளது:சு.சாமி