ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படித்து ஆராய்ந்து வருவதாகவும், வரும் 27ஆம் திகதி தம்முடைய தேர்தல் நிலைப்பாட்டின் இறுதி முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இந்த வாரக் கடைசியில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனே இறுதி முடிவை அறிவிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கூட்டணிக் கட்சிகளுடனும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கட்சிப் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடினோம். இதற்காக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பில் எங்கள் கட்சியினருக்கான கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் எங்களின் நிலைப்பாட்டை இரா.சம்பந்தனின் வருகையின் பின்னரே அறிவிப்போம் என்று மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மருத்துவ சோதனைகளுக்காக இரு வாரங்களுக்கு முன்னர் இந்திய மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்கின்றோம், 27ஆம் திகதி இறுதி முடிவு: மாவை சேனாதிராஜா