Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது,

வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக அல்லாத புதிய கூட்டணி உருவாக வேண்டும். உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்ற தமிழர்களின் மனங்களில் மிகப் பெரிய மதிப்பீடு கொண்டவராக இருக்கிற வைகோ அவர்கள், இந்த அளவுக்கு ஒரு ராஜாவும், ஒரு சுப்பிரமணிய சாமியும் தரக்குறைவாக பேசிவிட்ட பிறகும், இது பாஜகவின் கருத்து இல்லை, அதனால் தேசிய ஜனநாயக கூட்டணில் தொடர்ந்து நீடிக்கிறேன் என்பது போன்ற ஒரு நிலையை வைகோ அவர்கள் இனியும் எடுக்கலாகாது என்றார்.

0 Responses to பாஜகவில் இருந்து வைகோ வெளியேற வேண்டும்: தமிழருவி மணியன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com