சுபாஷ் சந்திரபோஸ் மாயமான மர்மங்களை வெளிப்படுத்தும் விஷயத்தில், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை பின்பற்றுகிறது பாஜக.
நேதாஜி என்று அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸின் மறைவில் மறைந்திருக்கும் மர்மங்களை வெளியிட வேண்டும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சின் போது கோரிக்கை வைக்கப்பட்டது.ஆனால் அப்போதைய அரசு அதை மறுத்துவிட்டது. ஆனால் அவரைப்பற்றிய கோப்புக்கள் பத்திரமாக உள்ளன என்றும் தகவல் வெளியிட்டது. காரணம் சுபாஷ் சந்திர போஸ் மறைவின் மர்மங்கள் ஒளிந்துள்ள கோப்புக்கள் எரிக்கப்பட்டு விட்டதாகத் தகவல்கள் வெளியாகின என்பதால், கடந்த கால அரசு கோப்புக்கள் பத்திரமாக உள்ளன என்று தெரிவித்திருந்தது.
அப்போது மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார் அப்போதைய பாஜக தலைவர் ராஜ்நாத் சிங். ஆனால், இப்போது அதே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நேதாஜி மறைவின் மர்மம் குறித்தத் தகவலை வெளியிட மறுத்துள்ளது இப்போதைய பாஜக அரசு. காரணம், வெளிநாடுகளுடனான நல்லுறவு பாதிக்கப்படும் என்று மத்திய அரசு காரணமும் தெரிவித்துள்ளது என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to சுபாஷ் சந்திர போஸ் விஷயத்தில் காங்கிரஸ் ஆட்சியை பின்பற்றுகிறது பாஜக