Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சி திருடர்களின் கூடாரமாக மாறியுள்ளதாக அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இன்று என்ன நடந்துள்ளது. திருடர்கள், கஸினோ சூதாட்டக்காரர்கள் மற்றும் சாராய முதலாளிமார் இதில் உள்ளனர். குறிப்பாக மிகப் பெரிய இரண்டு சாராய முதலாளிமார்கள் அமைச்சர்களாக உள்ளனர். இதன் காரணமாக சிறீலங்கா சுதந்திரக் கட்சி திருடங்களின் இடமாக மாறியுள்ளது.

இந்தக் கட்சி மக்களின் கட்சி என்ற நிலமை இன்று மாறியுள்ளது. இது தற்போது மக்களின் கட்சியல்ல. எனவே சுதந்திரக் கட்சியியை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய தேவை எமக்குள்ளது. அதற்காகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். குறிப்பாக இதனுடன் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்துள்ளது.

பொது முன்னணியின் அரசாங்கம் ஒன்றையே மஹிந்த முன்னெடுக்கின்றார். அத்துடன் மஹிந்தவின் அரசாங்கத்தில் 67 பேர் ஐக்கிய தேசியக் கட்சியின் அதாவது யானை சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள். எனவே நாமும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைவதில் பிரச்சினை இல்லையல்லவா? திருடுவதற்காகவோ அல்லது கொலை செய்வதற்காகவோ நாம் ஒன்றிணையவில்லை. இந்த நாட்டை முன்னேற்றுவதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த தலைமையில் சுதந்திரக் கட்சி திருடர்களின் கூடாரமாக மாறியுள்ளது: சந்திரிக்கா குமாரதுங்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com