தமிழ்- முஸ்லிம் தலைவர்களுக்கு இந்நாட்டில் ஒரு போதும் ஜனாதிபதியாக முடியாது. ஆகவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். இதனடிப்படையில் இவர்கள் ஒரு போதும் மைத்திரிக்கு வாக்களிக்கப் போவதில்லை என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மஹிந்த ராஜபக்ஷ நிலைப்பாட்டை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். இன்று நாட்டில் அபிவிருத்தி வேகம் அதிகரித்து செல்வதை எமது மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
பொது வேட்பாளராக வரும் மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு பரீட்சயமற்றவர். ஜனாதிபதியைப் போன்று அல்லாமல் பௌத்த சிங்கள கலாச்சாரத்தில் ஊறிப்போனவர். இவர் அமைச்சராக இருந்த காலத்தில்; எப்பொழுதும் தமிழ் பேசும் மக்களுக்கும் அல்லது இனப்பிரச்சினை தீர்வுக்கும் சாதகமாக குரல் கொடுத்து இல்லை. மாறாக பௌத்த சிங்கள தீவிரவாத அரசியல்வாதியாகத்தான் செயற்பட்டார்.
இன்று எதிரணி என்று சொல்லப்படும் கூட்டணியில் இருக்கும் கட்சிகளான ஜே.வி.பி, ஹெல உரிமய போன்றவை தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்விற்கு ஒரு போதும் அனுமதிக்க போவதில்லை. அதே நேரம் எமது அரசாங்கத்தில் இருந்த வேளை ஹெல உரிமய தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை எதிர்த்து வந்தது.
நாடாளுமன்ற தெரிவுக்குழு என்ற யோசனையை அரசாங்கத்திற்குள் கொண்டு வந்ததே அவர்கள் தான். ஜே.வி.பி அதிகாரப் பரவலாக்களுக்கு எதிரான ஒரு கட்சி. இப்படியான ஒரு கூட்டணிக்கு தமிழ் மக்கள் ஒரு போதும் வாக்களிக்க முடியாது.
சந்திரிக்காவுக்கு 11 வருட தனது ஆட்சி காலத்தில் சாதிக்க முடியாததை இனி சாதிக்க முடியுமா? ரணில் விக்கிரமசிங்கவை தேர்தலில் போட்டியிட விடாமல் ஐக்கிய தேசிய கட்சியை பலவீனமாக்கி மைத்திரியையும் உள்ளே கொண்டு வந்து அவரையும் தோற்கடித்து எதிரணியை பலவீனப்படுத்தி அதன் பின்னர் தனது மகனை அரசியலுக்கு அழைத்து வருவதையே பிரதானமாக கொண்டு செயற்படுகின்றார். ஆகவே தோல்வியடையும் எதிரணிக்கு தமிழ் மக்கள் ஒரு போதும் வாக்களிக்கப் போவதில்லை.
இன்று அரசாங்க தரப்பில் சிங்கள பௌத்த இனவாத கட்சிகள் எதுவும் இல்லை. ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் பேசி இனப்பிரச்சினைக்கான தீர்வை நாம் பெற்றுக் கொடுப்போம். இன்று எதிரணியில் இருக்கும் சிங்கள பௌத்த கட்சிகளுக்கு தமிழ் தேசியம் பேசுபவர்கள் வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றார்களா? கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் இதனை நன்கு புரிந்துள்ளார்கள்.
கொழும்பு நகரிலுள்ள தமிழ் வர்த்தகர்கள் தங்களது வர்த்தகம் நிலையான முறையில் இடம்பெறுவதற்கு ஜனாதிபதிக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். அதே போல் கொழும்பு நகரில் வறுமைக் கோட்டில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் தமது பிள்ளைகளின் கல்விக்கும் வீட்டு வசதிவாய்ப்பிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர். ஜனாதிபதியின் வெற்றியின் மூலமாக இந்நாடு மேலும் பாரிய அபிவிருத்தியை அடைந்து ஆசியாவின் சிறந்த நாடாக மாறிவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இத்தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு, கிழக்கு மக்களை அவர்கள் விருப்பப்படி வாக்களிப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டும். மலையக மக்கள் வெற்றி பெறக்கூடிய ஜனாதிபதிக்கு வாக்களிப்பதன் மூலமாகவே மேலதிக அபிவிருத்திகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். மலையக எதிரணி அரசியல் தலைவர்கள் சொல்வதைப்போல் 7 பேர்ச் காணியில் வீடமைத்துக் கொடுப்பது சம்பந்தமாக மைத்திரிபால வாய் திறக்கவில்லை.
ஆகவே இது நடைபெறப் போவதும் இல்லை. மலையக மக்களை பிழையாக வழிநடத்துபவர்களை அடையாளங்கண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மலையக மக்கள் அணிதிரண்டு வாக்களிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை” என்றுள்ளது.

0 Responses to தமிழ் மக்கள் ஒருபோதும் மைத்திரிக்கு வாக்களிக்கப் போவதில்லை: பிரபா