Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் சிறைக் கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான கஃபே (CAFFE) குற்றஞ்சாட்டியுள்ளது.

மாத்தறை, கம்புறுபிட்டியவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஹிந்த ராஜபக்ஷவின் பிரசாரக் கூட்டத்துக்கான, மேடை நிர்மாணம் மற்றும் அலங்கார பணிகளுக்காக காலி சிறைச்சாலையைச் சேர்ந்த 44 சிறைக் கைதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுக்கு நீல நிற காற்சட்டை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கஃபே அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, மாத்தறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதியாவார். அவர், கொமியுனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினரே.

இந்தநிலையில், கம்புறுபிட்டியவில் இடம்பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரசாரக் கூட்டத்துக்காக சிறைச்சாலையின் வாத்தியக் குழு, சிறைச்சாலை பஸ், சிறைச்சாலைக்குச் சொந்தமான கொடிக் கம்பங்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன” என்றுள்ளது.

0 Responses to மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் சிறைக் கைதிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர்: கஃபே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com