பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித இரகசிய ஒப்பந்தத்தையும் செய்யவில்லை என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசிய ஒப்பந்தத்தை செய்துள்ளதாக பொய்யான தகவலை வெளியிடுவதன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மக்களை பிழையாக வழிநடத்தப் பார்க்கிறார் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருடன் ஒப்பந்தமொன்றை செய்து கொண்டால் அதனை வெளிப்படையாக அறிவிக்கும் என்றும், ஆனாலும் அப்படியான ஒப்பந்தங்கள் ஏதுவும் எவருடனும் செய்து கொள்ளப்படவில்லை என்றும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மைத்திரியுடன் த.தே.கூ ஒப்பந்தம் செய்யவில்லை: எம்.ஏ.சுமந்திரன்