Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சகல இனங்களையும், மதங்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு அடுத்த கட்டம் நோக்கி செல்வதற்கு நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். மாறாக, பொய்ப் பிரச்சாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு முள்ளியவளையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “27 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலை நான் நடத்தினேன். அந்தத் தேர்தலில் நீங்கள் விரும்பிய மாகாண சபையை தெரிவு செய்தீர்கள். ஆனால், ஜனாதிபதித் தேர்தல் என்பது நாடு முழுவதற்குமான தேர்தல் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன மத குரோதங்களை வளர்த்துக் கொள்வதால் எல்லோருக்கும் பிரச்சினைகள் வரும். எனவே, இன மத குரோதங்களை மறந்து ஒரே நாட்டின் மக்கள் நாங்கள் என்பதைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் பல மில்லியன்களைச் செலவு செய்துள்ளது. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றுவதற்காக நாம் தொடர்ந்தும் செயற்படுகின்றோம்.

இனவாத அரசியல் எல்லோருக்கும் பிரச்சினையானது. புத்திசாலித்தனமான அரசியலை தெரிவு செய்வோம். இனவாதம் பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ளனர். ஆனால், அப்பாவி மக்கள் மட்டுமே இங்கிருக்கிறார்கள். வடக்கின் வசந்தம் உங்களின் வசந்தம், உங்கள் பிள்ளைகளின் வசந்தம்” என்றார்.

0 Responses to பொய்ப் பிரச்சாரங்களை நம்பி ஏமாற வேண்டாம்: முல்லைத்தீவில் மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com