மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறிவிட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும், பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கப் போவதாகவும் சில ஊடகங்களில் பொய்யான செய்திகள் வெளியாகியிருந்ததாவும், ஆனாலும், அப்படியான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டியிலும் கூடி ஆராய்ந்தனர். ஆனாலும், இறுதி முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

0 Responses to முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து இன்னும் வெளியேறவில்லை: ஹசன் அலி