Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாபதிபதி முறையிலுள்ள பாதகமான அம்சங்கள் தொடர்பில் அரசாங்கத்திலிருந்து விலகிய பின்னரே சில தரப்பினருக்கு புலம்படத் தொடங்கியுள்ளது. இப்போதுதான் அது தொடர்பில் பேசுகின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தளை நாவுல பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பிளவுபட்ட நாட்டின் ஐக்கியதுவத்தை பாதுகாக்குமாறு 2005ஆம் ஆண்டில் எனக்குக் கூறப்பட்டது. செய்வதை கூறும் ஜனாதிபதி என்ற வகையில் அதனை நான் செய்து முடித்தேன்.

ஆயுத வியாபாரமும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தற்போது ஆயுதங்களை விற்பனை செய்யமுடியவில்லை. தரகுப்பணமும் கிடையாது. அதன் பின்னர் 2010ஆம் ஆண்டு மீண்டும் நான் மக்கள் மத்தியில் வந்தேன். மீண்டும் நாட்டை அபிவிருத்து செய்வதற்கான ஆனையைக் கேட்டேன் என் மீது நம்பிக்கை வைத்து அதிகாரத்தை எனக்கு வழங்கினீர்கள்.

குறுகிய காலத்திற்குள் நான் வீதிகளை சீரமைத்தேன். மக்களின் கருத்தை கேட்கவேண்டும். நாம் ஒரு வேலையைச் செய்தால் அது தவறா? சரியா? எனக்கேட்க வேண்டும். தற்போது மீண்டும் மக்களின் முன் வந்துள்ளோம்.

நாட்டில் ஒழுக்கமான சமூகத்தை ஸ்தாபிக்கவே உங்களிடம் இம்முறை ஆணையைக் கோருகின்றேன். இந்த பிள்ளைகள் எதிர்காலத்தில் உலகை வெற்றிகொள்ளக்கூடிய நாட்டை உருவாக்குவது எனது அடுத்து நடவடிக்கையாகும். அதற்காகவே உங்கள் முன் வந்துள்ளேன்” என்றுள்ளார்.

0 Responses to நிறைவேற்று அதிகாரத்தின் பாதகங்கள் குறித்து அரசிலிருந்து விலகிய பின்னரே பேசுகின்றனர்: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com