Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீடித்த அரசியல் உரிமையையும், அபிவிருத்தியையும், வாழ்வாதார மேம்பாட்டையும் தொடர்வதற்கு அதிகாரத்திலுள்ள தலைவருக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அதிகாரத்திலுள்ளவர்களுக்கும் அதிகாரத்தை கைப்பற்றக் கூடியவர்களுக்கும் மக்கள் தமது ஆதரவை வழங்கவேண்டும். அவ்வாறு மக்களின் ஒன்றிணைந்த ஆதரவின் மூலமே இன்றுள்ள அமைதிச் சூழலை பாதுகாக்க முடியுமென்பதுடன் நீடித்த அரசியல் உரிமையையும் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்திலும் மேம்பாடு காணமுடியும்.

நாம் எமது மக்களின் நலன்சார்ந்து பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேசியம் பொய்யானதும் மாயையானதுமாகும். அதுமட்டுமன்றி மக்களுக்கான பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் ஆற்றல் அக்கறை அவர்களுக்கு இருக்கின்றன. கடந்த கால தமிழ்த் தலைமைகளுக்கு பல வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அவற்றை சரியான முறையில் பயன்படுத்தாத காரணத்தினாலேயே எமது மக்கள் பல்வேறுபட்ட அவலங்களை எதிர்கொள்ள வேண்டி நேர்ந்தது.

எமது மக்களின் வாழ்வாதாரத்தை ஒளிமயமானதாகவும் பயனுள்ளதாகவும் பெற்றுக் கொடுப்பது மட்டுமன்றி அரசியல் உரிமைகளையும் வென்றெடுக்கப்படல் வேண்டும். இதற்கு மக்கள் சரியான தலைமையின் பக்கம் அணிதிரண்டு ஆதரவளிக்கும் பட்சத்தில் மேலும் பாரிய முன்னேற்றங்களை காண முடியும்.” என்றுள்ளார்.

0 Responses to அதிகாரத்திலுள்ள தலைவரைத் தெரிவு செய்வதே அரசியல் தீர்வுக்கு அவசியமானது: டக்ளஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com