ஹொங்காங்கில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
இதுவரை போராட்டத்தை வழிநடத்திய ஜனநாயக சார்பு இயக்கத்தின் முக்கிய 3 ஸ்தாபகர்களும் போலிசாரிடம் சரணடையப் போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ள அதேவேளை மாணவ தலைவரான ஜொசுவா வொங் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பென்னி டாய் என்ற ஜனநாயக சார்பு இயக்கத் தலைவர் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு விடுத்த செய்தியில் நாம் சரணடையத் தயாராகி உள்ள அதே சமயம் மாணவர்களும் தமது போராட்டத்தைக் கைவிட்டு விட்டு பின் வாங்க வேண்டும் என்றுள்ளார். ஞாயிற்றுக் கிழமை நூற்றுக்கும் அதிகமான ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதல் மூண்டதில் பல மாணவர்கள் படுகாயம் அடைந்திருந்தனர். இது ஹாங்கொங்கில் மாணவப் புரட்சி தொடங்கி இரு மாதங்களில் ஏற்பட்ட மிக மோசமான வன்முறையாகும்.
இந்நிலையில் பென்னி டாய் மேலும் கூறுகையில், புதன்கிழமை தாம் போலிசாரிடம் சரணடையவிருப்பதாகவும் இது கோழைத்தனத்தால் எடுக்கப் பட்ட முடிவல்ல, சமாதானம் மற்றும் அன்பு என்பவை நிலைநாட்டப் படுவதற்காக எடுக்கப் பட்ட முடிவு என்பதுடன் இதயமற்ற சீன அரசுக்கான மௌன கண்டனம் என்றும் தெரிவித்திருந்தார். சரணடையவுள்ள டாய், சான் கின்-மான் மற்றும் சூ யி மிங் ஆகிய மூன்று நபர்களும் தமது ஜனநாயக சார்பு இயக்கத்தை அரசியல் சீர்திருத்தத்துக்காக 2013 இல் ஸ்தாபித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஹாங்கொங் மாணவப் புரட்சியை வழிநடத்தி வந்த பருவ வயது தலைவரான ஜொசுவா வொங் தனது இளைஞர் புரட்சி அமைப்பின் இரு உறுப்பினர்களுடன் இணைந்து அரசுடன் பாதுகாப்பான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கும் ஜனநாயகத்தை வலியுறுத்துவதற்கும் என உண்ணாவிரதப் போராட்டத்தில் மாணவர்கள் பங்குபெறுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஜொசுவா வொங் இது குறித்து CNN ஊடகத்துக்குக் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது ஹாங்கொங் அரசுக்கு அழுத்தம் பிரயோகிக்கத் தமது வசம் எஞ்சியிருக்கும் ஒரே இறுதி உறுதியான மார்க்கம் உண்ணாவிரதப் போராட்டமே என்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஹாங்கொங் ஆர்ப்பாட்டம் போலிசாருடன் மோதலாக மாறியதை அடுத்து மாங்கொக் பகுதியில் 12 பேர் உட்பட சுமார் 40 மாணவர்கள் கைது செய்யப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஹாங்கொங்கில் மாணவ தலைவர் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைப்பு!