Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரியாவுக்குள் இருந்து லெபனானுக்குள் நுழைய முயன்ற ISIS தலைவன் அபு பக்கர் அல் பக்தாதியின் மனைவி ஒருவரும் மகனும் லெபனான் எல்லையில் வைத்துக் கைது செய்யப் பட்டிருப்பதாக லெபனானின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் கைது செய்யப் பட்ட இவர்கள் இருவரினதும் பெயர் மற்றும் குடியுரிமை ஆகிய விபரங்கள் இதுவரை வெளியிடப் படவில்லை. ISIS இயக்கத் தலைவன் அல் பக்தாதி குறித்து உறுதியான சிறிய தகவல்களை அளிப்பவர்களுக்குக் கூட $10 மில்லியன் டாலர்களை வழங்குவோம் என அமெரிக்கா அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அல்பக்தாதியின் மனைவி மற்றும் மகனின் கைது குறித்து வெளியாகியுள்ள உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் பல கேள்விகளை அரசியல் அவதானிகள் மத்தியில் எழுப்பியுள்ளது. தீவிரவாதப் பிரச்சினை தொடர்பான நிபுணரான சஜ்ஜான் எம்.கோஹெல் இவ்விடயம் குறித்து CNN இற்குத் தெரிவிக்கையில், 'அல்பக்தாதியுடன் அதிக நெருக்கமுடைய எவரும் இதுவரை கைது செய்யப் பட்டதாக நாம் கேள்விப் பட்டதில்லை. இந்நிலையில் லெபனான் எல்லையில் அல்பக்தாதியின் மனைவியும் மகனும் என்ன செய்து கொண்டிருந்தனர்? ஒரு வேளை அல்பக்தாதியுடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது சிரியா அல்லது ஈராக்கில் மறைந்து வாழ்வதாகக் கருதப் படும் அல்பக்தாதி கடந்த மாதம் வடக்கு ஈராக்கில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் படுகாயம் அடைந்ததாகத் தகவல் வெளியாகி இருந்த போதும் சில நாட்கள் கழித்து ISIS வெளியிட்ட ஆடியோவில் அல் பக்தாதி உரையாற்றி இருந்ததும் அந்த உரையில் அமெரிக்கக் கூட்டுப் பலவீனமானவை என்றும் அவற்றின் சக்தி குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to ISIS தலைவன் அல்பக்தாதியின் ஓர் மனைவி மற்றும் மகன் லெபனானில் கைது?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com