Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட காணிகளை மக்களிடம் திருப்பவும் வழங்குவேன் என்று பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கம் உங்களை கவனிக்கவில்லை என்பதை நான் நன்கறிவேன்.

பெறுமதி மிக்க பல இடங்களை மஹிந்த ராஜபக்ஷ தமது சிநேகபூர்வமானவர்களுக்கு வழங்கி, காணிகளை சட்டவிரோதமான முறையில் கைப்பற்றினார்கள். அவற்றை வேறு நபர்களுக்கு வழங்கினார்கள். அந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை நடத்தி, அந்த காணிகளை உரிமையாளர்களுக்கு வழங்குவோம் என இந்த சந்தர்ப்பத்தில் தெளிவாக கூறிக் கொள்கின்றேன். அவர்களை அனைவரையும் சட்டத்திற்கு முன்பாக கொண்டு சென்று தண்டனையை பெற்றுக்கொடுப்போம்.

எமது புதிய அரசாங்கத்தின் ஊடாக அனைத்து இனத்தவரும், அனைத்து மதத்தவரும் சுதந்திரமாக தமது நடவடிக்கை முன்னெடுக்க முடியும் என்பதனை நான் உறுதியாக கூறிக்கொள்கின்றேன்.” என்றுள்ளார்.

0 Responses to சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட காணிகளை மக்களிடம் மீள வழங்குவேன்: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com