ஜனநாயகத்தை அழித்து ஊழலில் திளைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும். அதுவே, இப்போதுள்ள பிரதான இலக்கு என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதும் அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் தேசிய அரசாங்கத்தில் மக்கள் விடுதலை முன்னணி அங்கம் வகிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "ஜனநாயகத்தை அழித்து, மனித உரிமைகளை மிதித்து, இன ஐக்கியத்தை சீர்குலைத்து, ஊழல் மோசடிகளுடன் அழிவை நோக்கிச் செல்லும் இந்த அரசின் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எமது முதன்மை நோக்காகும்.
எனவே, ஜனவரி 08 ஆம் திகதி இந்தப் பயணத்துக்கு முடிவு கட்டும் வகையில் மக்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட வேண்டும் என்றே நாம் கூறிவருகின்றோம். வேறு எவர் குறித்தும் எமக்கு உறுதிமொழி வழங்கிவிட முடியாது. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க, கட்சியின் மாநாட்டின் போது, பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக கூறினார். ஆனால், இன்று அவர் வேறு பக்கம் தாவிவிட்டார்.
எனவே, மக்களுக்கு விழிப்பூட்டி மக்கள் சக்தியை திரட்டுவதே எமது நோக்கு. அந்த வகையிலேயே மக்கள் விடுதலை முன்னணி தேர்தலுக்கு முகம்கொடுக்கின்றது. அதேவேளை, சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கப் போவதில்லை என்று நாம் தெளிவாகக் கூறியுள்ளோம். எனினும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்குத் தேவையான தலையீடுகளை வழங்குவோம்; யோசனைகளை முன்வைப்போம்" என்றுள்ளார்.

0 Responses to ஜனநாயகத்தை அழித்து, ஊழலில் திளைக்கும் மஹிந்த அரசை தோற்கடிப்போம்: அநுரகுமார திஸ்ஸநாயக்க