ஜனாதிபதித் தேர்தலின் பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான பகிரங்க நேரடி விவாதமொன்றை ஏற்பாடு செய்வதற்கான முயற்சிகளில் சில தொழில்சார் அமைப்புக்களும், புத்திஜீவிகளும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விவாதத்தில் ஜனநாயகம், சீரான நிர்வாகம், நீதிமன்றங்களில் சுயாதீனம் ஆகியவை பிரதான கருப்பொருள்களாக இருக்குமெனவும், இந்த விவாதத்தை ஒரே நாளிலோ அல்லது ஒருசில தினங்களிலோ நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த விவாதத்தில் கலந்து கொள்ளுமாறு கோரும் எழுத்துமூல அழைப்பை வரும் வாரத்தில் அனுப்பவுள்ளதாகவும், விவாதத்தைப் பகிரங்க இடமொன்றில் நடத்த உத்தேசித்துள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
பகிரங்க இடத்தில் இவ்விவாதத்தை நடத்த இரு பிரதான வேட்பாளர்களும் விரும்பாவிட்டால், தொலைக்காட்சி மூலம் இருவருக்கும் சமமான நேரத்தை வழங்கி விவாதத்தை நடத்தவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மஹிந்த- மைத்திரி நேரடி விவாதம்?