Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காலி நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பிரதியமைச்சர் நிஸாந்த முத்துஹெட்டிகம, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட விருந்தினர் வாயிலின் ஊடாக வெளிநாட்டுக்கு பயணமாகிவிட்டார் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையிலேயே அவர், வெளிநாட்டுக்கு பயணமாகியுள்ளதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலி வதுருவ பகுதியில் மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காக அமைக்கப்பட்ட மேடையொன்றை சேதப்படுத்தியமையுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸ் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து கடத்திச் சென்றமை தொடர்பில் நிஸாந்த முத்துஹெட்டிகமவுக்கு நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் பிடியாணை பிறந்திருந்தது. இந்த நிலையிலேயே அவர், நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இதனிடையே, அவருக்கு பாதுகாப்பு வழங்கிய அமைச்சு பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த மூவர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதியமைச்சர் நிஸாந்த முத்துஹெட்டிகம, நாட்டைவிட்டு தப்பியோடியமை தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனாலும், விமானநிலையத்தின் விசேட விருந்தினர் வழியே நிஸாந்த முத்துஹெட்டிகம வெளியேறிச் செல்லும் போது பொலிஸார் ஏன் அவரைக் கைது செய்யவில்லை என்ற கேள்விக்கு அஜித் ரோஹண பதிலளிக்கவில்லை. மாறாக, அவர் சிங்கப்பூர் சென்றுள்ளதாக அறிவதாகவும், அங்கிருந்து திரும்பும் போது கைது செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

0 Responses to பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிரதியமைச்சர் முத்துஹெட்டிகம வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com