Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தன் மீது பொறாமை கொண்டு சூழ்ச்சிகளைச் செய்வதாகவும், அவரே தன்னுடைய பிரதான எதிரி என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேசியப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகளை அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை காலை சந்தித்துப் பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

என்னோடு போட்டியிடுவதற்கு தகுதியானவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே. அவருக்குத் தான் கட்சி சார்ப்பு உண்டு. மைத்திரிபால சிறிசேன என்னுடைய போட்டியாளர் அல்ல என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி, “சந்திரிக்கா குமாரதுங்க என் மீது பொறாமை கொண்டுள்ளார். அவருக்கு செய்ய முடியாததை நான் செய்துள்ளேன் என்பதாலேயே சூழ்ச்சி செய்கின்றார்” என்றுள்ளார்.

0 Responses to சந்திரிக்கா பொறாமை கொண்டுள்ளார்; அவரே என்னுடைய பிரதான எதிரி: மஹிந்த ராஜபக்ஷ!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com