“தனித் தமிழீழக் கனவு” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களினால் இன்னமும் கைவிடப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை செய்துள்ளார் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க வேண்டுமென்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான குறிக்கோளாகும். இதற்கான அழுத்தத்தை வெளிநாட்டு புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கி வருவது, விடுதலைப் புலிகள் ஆதரவாளரான சுரேன் சுரேந்திரனே சர்வதேச தொலைக்காட்சியொன்றில் ஒப்புக் கொண்டுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் இவர்களின் பலம் வேண்டுமென்பதற்காகவே எதிரணியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தீட்டிய வெற்றுக் கடதாசியில் கையொப்பமிட்டுள்ளனர். ஜெனீவாவில் இலங்கைக்கெதிராக திரட்டிய சாட்சியங்கள் போதாமை காரணமாக சாட்சியம் பெறும் கால வரையறையை நீடித்துள்ளமை அனைத்தும் ஜனாதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி முயற்சிகளின் விளைவுகளே” என்றுள்ளார்.

0 Responses to தமிழீழக் கனவு கைவிடப்படவில்லை; த.தே.கூ. உடன் மைத்திரி வெற்றுக் காகிதத்தில் கைச்சாத்து: ஜீ.எல்.பீரிஸ்