வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களுடன் பொது எதிரணி பகிரங்கமான ஒப்பந்தத்தைச் செய்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஆனால், பொது எதிரணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் செய்து கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து அவிசாவளையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பொது எதிரணி கூட்டணிக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தம் இருக்கின்றது என்று அரசாங்கம் சொல்லித்திரிகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்த கூற்றுக்கு துணையாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இதை ஒரு பெரிய விவகாரமாக பேசியுள்ளார். விமல் வீரவன்ச, சுசில் பிரேமஜயந்த, மஹிந்தானந்த அளுத்கமகே, உதய கம்மன்பில என்று ஒரு கூட்டமே இதை திரும்ப, திரும்ப பேசி வருகிறது.
இவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். உண்மைதான், எமக்கு ஒப்பந்தம் இருக்கின்றது. அதுவும் இரகசிய ஒப்பந்தம் அல்ல, பகிரங்க ஒப்பந்தமே இருகின்றது. ஆனால், எமது ஒப்பந்தம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அல்ல. எமது ஒப்பந்தம், கூட்டமைப்புக்கு வாக்களித்த, வடக்கில், கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடன்தான் இருக்கின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் (நேற்று) வடக்குக்கு வாக்கு தேடி போயுள்ளார். மஹிந்தவுக்கு யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும், முல்லைத்தீவுக்கும், மன்னாருக்கும், கிழக்கிலே மட்டக்களப்பிற்கும், திருகோணமலைக்கும், அம்பாறைக்கும் சென்று வாக்கு கேட்க முடியும் என்றால், எங்களுக்கு வடக்கிற்கும், கிழக்கிற்கும் சென்று வாக்கு கேட்க முடியாதா?
வடக்கு, கிழக்கு இரண்டுமே இந்த நாட்டின் மாகாணங்கள். அங்கே வாழும், 16 இலட்சம் தமிழர்களில் பத்து இலட்சம் பேர் வாக்காளர்கள். அவர்களின் பெயர்கள் இந்த நாட்டு தேர்தல் ஆணையாளரின் வாக்காளர் இடாப்பில் உண்டு. ஆகவேதான் அவர்களின் வாக்குகளை நாங்கள் நாடுகின்றோம். ஆகவேதான் அந்த மக்களுடன் நமக்கு பகிரங்கமாக ஒப்பந்தம் இருக்கின்றது என்று இந்த மேடையில் இருந்து பகிரங்கமாக கூறுகிறேன்” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடன் பொது எதிரணி பகிரங்க ஒப்பந்தம் செய்துள்ளது: மனோ கணேசன்