Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகில் 38 சதவிகதம் பெண்கள் தங்களது ஆண் துணையால் கொல்லப்பட்டு வருகின்றனர் என்று, உலக சுகாதார மையம் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார மையம் பெண்கள் மற்றும் ஆண்கள் கொலைப் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளதாகத் தெரிய வருகிறது. அதன் அடிப்படையில் உலகில் உள்ள பெண்களில் 38 சதவிகிதம் பெண்கள் தங்களது ஆண் துணையால் கொலை செய்யப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது. இதே போன்று 6 சதவிகிதம் ஆண்கள் தங்களது பெண் துணையால் கொலை செய்யப்படுகின்றனர் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

3 முதல் 14 வயது வரையான பெண் குழந்தைகள் கூட தங்களுக்குத் தெரிந்த ஆண்களால்தான் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகின்றனர் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 2 ஆயிரமாவது ஆண்டை ஒப்பிடும்போது 2012ம் ஆண்டில் பெண்கள் தங்களது வீட்டில் கொலை செய்யப்படுவது என்பது 16 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்றும் தகவல் வெளியிட்டுள்ளது.

0 Responses to உலகில் முப்பத்தெட்டு சதவிகிதம் பெண்கள் தங்களது ஆண் துணையால் கொல்லப்படுகின்றனர்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com