Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படும் போது தேர்தல்கள் ஆணையாளரால் அங்கீகரிக்கப்படாத உத்தியோகப்பற்றற்ற முடிவுகளை ஊடகங்கள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கோரியுள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அத்தோடு, உத்தியோகப்பற்றற்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுமாயின் உடனடியாக வாக்கெண்ணும் பணிகள் நிறுத்தப்பட்டு அந்த முடிவு வெளியானமை குறித்து பொலிஸ் விசாரணை நடத்தியதன் பின்னரே மீண்டும் பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தேர்தல்கள் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடனான சந்திப்பின் போதே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஊடகங்கள் செய்திகளை வெளியிடும் போது அதனை பக்கச்சார்பின்றி வெளியிட வேண்டும். நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தல் நடத்துவதானது கிரிக்கெட் போட்டியின் குழு செயற்பாடு. அனைவரும் களத்தடுப்பில் ஈடுபட வேண்டும்.

இதேவேளை, அரச ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. தேர்தல்கள் ஆணையாளரின் உத்தரவுகளை மீறி செயற்படும் ஊடகங்கள் குறித்து இன்னும் ஒரு வாரத்தில் தீர்மானிக்கப்படும்” என்றுள்ளார்.

0 Responses to உத்தியோகப்பற்றற்ற தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம்; ஊடகங்களிடம் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com