ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்கக்கூடாது. புறக்கணிக்கும் பட்சத்தில் எமது எதிர்கால இலட்சியத்தை அது கேள்விக்குறியாக்கிவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை சில தினங்களில் அறிவிக்கவுள்ளதாகவும், அதற்கு முன் மக்களை முழுமையாக வாக்களிக்கக் கோருவதே தமது முக்கிய பணியென்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆராயும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கூட்டம் வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன்பின் ஊடகங்களிடம் பேசும் போதே அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது, எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என்பன குறித்து பிரதேச ரீதியாக வடக்கு, கிழக்கில் மக்கள் பிரதிநிதிகளின் கருத்தறியும் கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் கருத்துக்களை ஆராய்ந்து பொதுவான முடிவொன்றை கூட்டமைப்பின் தலைமை அறிவிக்கும். இந்த அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும்.
இதன்போது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாக அறிவிக்கும். அதேசமயம், நாம் தேர்தலைப் புறக்கணித்தால் எமது எதிர்கால இலட்சியம் கேள்விக்குறியாகிவிடும். எனவே நாம் தேர்தலைப் புறக்கணிக்கக்கூடாது. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதையே நாம் கோரி நிற்கிறோம்.
இதன்படி அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து உள்ளூராட்சி, மாகாண சபை உறுப்பினர்களும், கட்சிப் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும் இன்று முதல் வாக்களிக்க வலியுறுத்தும் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பர்கள்” என்றுள்ளார்.’

0 Responses to ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பது எமது எதிர்கால இலட்சியத்தை கேள்விக்குறியாக்கும்: கூட்டமைப்பு