Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷாவை, அதன் கூட்டணியில் இருக்கும் விஜயகாந்த் சந்திக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

 கடந்த சனிக்கிழமை அன்று இரண்டு நாள் பயணமாக சென்னை வந்திருந்தார் அமித் ஷா. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணில் மதிமுக இல்லை என்று அவர் அறிவித்துள்ள நிலையில் பாமக இதுக்குறித்து அறிவிப்பு ஒன்றும் வெளியிடவில்லை என்றாலும்,. பாமகவின் தலைமையை ஏற்றுக் கொள்பவர்களுடன்தான் கூட்டணி என்று பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இருப்பினும் அன்புமணி ராமதாஸ் அமித் ஷாவை சந்தித்து உரையாடிவிட்டு வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐஜெகே கட்சியை சேர்ந்த பாரிவேந்தரும் அமித் ஷாவை சந்தித்ததாகத் தெரிய வருகிறது. ஆனால் கூட்டணியில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் அல்லது அவர் கட்சியை சேர்ந்த முக்கியப் பிரமுகர்களில் ஒருவர் அமித் ஷாவை சந்திக்கக் கூடும் என்று எதிர்பார்த்த நிலையில் விஜயகாந்தோ மற்றவர்களோ அமித் ஷாவை சந்திக்கவில்லை. இதற்குக் காரணம் பாஜக தலைமையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் என்று அமித் ஷா அறிவித்ததுதான் என்று கூறப்படுகிறது. தேமுதிக தங்களது தலைமையை பாஜக தமிழகத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்ததுதான் காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷாவை கூட்டணியில் இருக்கும் விஜயகாந்த் சந்திக்கவில்லை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com