Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ வைப்பகத்தில் (வங்கியில்) அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் இராணுவத்தினரால் மீட்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணங்களில் அடையாளம் காணப்பட்ட மேலும் 2184 பொதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று வியாழக்கிழமை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 1960 உரிமையாளர்களுக்குச் சொந்தமான தங்க ஆபரணங்களே அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலிருந்தும் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 1960 பேரும் கிளிநொச்சி மற்றும் வவுனியாவிலிருந்து நான்கு விசேட யாழ்தேவி புகையிரதங்கள் மூலம் இன்று கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கு அண்மையில் விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிளிநொச்சியில் வைத்தும் ஒருதொகை தங்கப்பொதிகளை கையளித்திருந்தார்.

0 Responses to தமிழீழ வைப்பகத்தில் மீட்கப்பட்ட தங்கம்; மஹிந்தவால் இன்று உரிமையாளர்களிடம் கையளிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com